இலங்கை மெதடிஸ்த திருஅவை
செங்கலடி சேகரம்
நத்தார் புதுவருட நிகழ்ச்சி நிரல் 2022 – 2023
கிறிஸ்துவுக்குள் அன்பான இறை மக்களே!
நாம் வாழும் சவால்கள் நிறைந்த காலங்களுக்கூடாக இதுவரை நம்மை நடத்தி பாதுகாத்த கடவுளுக்கே துதியும் மகிமையும் உண்டாகட்டும்.
இறைமகன் இயேசு இவ்வுலகத்தின் மனுக்குலத்தின் மீட்புக்காக மனிதனானார். “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆன்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” மத்தேயு 1:22-23 இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். இஸ்ரவேல் மக்களின் வரலாற்றில் அவர்கள் வாழ்வில் எதிர்கொண்ட இக்கட்டான நேரங்களில் எல்லாம் நம்பிக்கை இழந்து போராட்டங்களுக்கு முகம் கொடுத்தபோதெல்லாம் எங்களின் விடிவிற்காகவும் எங்களைக் காக்கவும் யார் இருக்கின்றார்கள்? என்னும் ஏக்கம் அவர்களுக்குள் எழுந்தபோது ஓர் மீட்பர் வருவார் என்னும் நம்பிக்கையின் செய்தி இறைவாக்கினர்கள் வழியாக (ஏசாயா 7:14) இஸ்ரவேல் மக்களுக்கு வழங்கப்பட்டது. வருகின்ற மீட்பர் இம்மானுவேலனாக நம்மோடு வாழ்பவராக இருப்பார் என்னும் நம்பிக்கையின் செய்தியாக அது அமைந்தது.
இன்று நாமும் நமது வாழ்வின் ஓட்டத்தில் நம்பிக்கையற்ற நிலையில் பல்வேறு சந்தர்பங்களில் கைவிடப்பட்டநிலை, ஏக்கம், கலக்கம், கண்ணீர், விரக்தி போன்ற நிலைகளில் எமக்கு உதவ யார் உண்டு என்னும் கேள்விக்கு இறைவன் நம்முடன் உள்ளார் என்னும் இறைவார்த்தை உட்சாகமும், நம்பிக்கையும், பெலனும் தரும் வார்த்தையாக உள்ளது. சங்கீதம் 46 எல்லாம் மாறினாலும் “படைகளின் இறைவன் மாறாதவராக இருந ;து நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்” என்ற தைரியத்தை தருகின்றது. யுத்தங்களை ஓயப்பண்ணுகிறவரும், வில்லை ஒடிக்கிறவரும், ரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கின்றவருமாயிருக்கும் இறைவன் நம்மோடு என்றும் இருப்பதினால் நாம் கலங்கி, பயப்பட்டு தடுமாற வேண்டியதில்லை எவ்வாறான நிலையிலும் இம்மானுவேலனாகிய இறைவன் நம்முடன் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து அவருக்கு சான்று பகர இறைவன் அருள்வேண்டி எம்மை அர்பணிப்போம்.
இக் கிறிஸ்மஸ் நாட்களும் தொடர்ந்தும் வரும் புதிய ஆண்டும் எமக்கு ஆசீர்வாதமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஆமென்
சேகர இறைபணியாளர்கள்.
கிறிஸ்து பிறப்பு புதுவருட நிகழ்ச்சி நிரல் 2022 - 2023
பாடல் வழிபாடு, ஒளிவிழா
15.12.2022 வியாழக்கிழமை காலை 10.00 களுவன்கேணி முன்பள்ளி ஒளிவிழா
16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 2.00 நரிப்புல் தோட்டம் நெல்லிக்காடு ஞாயிறுபாடசாலை சிறுவர்களின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம ;.
08-09.12.2022 வியாழன், வெள்ளி மாலை 2.30 வேப்பவெட்டுவான் மெதடிஸ்த முன்பள்ளி, ஞாயிறு பாடசாலை, வானவில் சிறுவர் நிகழ்ச்சி திட்ட ஒளிவிழா
18.12.2022 ஞாயிறு காலை 8.00 மணி தளவாய் மெதடிஸ்த திருச்சபை பாடல் ஆராதனை, முன்பள்ளி, ஞாயிறுபாடசாலை ஒளி விழா
18.12.2022 ஞாயிறு காலை 7.30 மணி களுவன்கேணி திருச்சபை பாடல் ஆராதனை, ஞாயிறு பாடசாலை பிள்ளைகளின் ஒளிவிழா
18.12.2022 ஞாயிறு காலை 8.30 மணி வேப்பவெட்டுவான ; திருச்சபை பாடல் ஆராதனை
18.12.2022 ஞாயிறு மாலை 4.30 மணி செங்கலடி திருச்சபை பாடல் ஆராதனை.
27.12.2022 செங்கலடி ஞாயிறு பாடசாலை ஒளிவிழா மாலை 3.30 மணி
பாடகர் குழு இல்ல தரிசிப்பு
18.12.2022 தளாவாய் திருச்சபை பாடகர்குழு இல்லத்தரிசிப்பு
19.12.2022 வேப்பவெட்டுவான் திருச்சபை பாடகர்குழு இல்ல தரிசிப்பு காலை 10.30 மணி
20-23.12.2022 செங்கலடி திருச்சபை பாடகர்குழு இல்லத்தரிசிப்பு
20-23.12.2022 களுவன்கேணி திருச்சபை இல்லத ;தரிசிப்பு
26.12.2022 திங்கள் பகல் 2.00 மணி நரிப்புல்தோட்டம நெல்லிக்காடு இல்லத்தரிசிப்பு கிறிஸ்து பிறப்பு வழிபாடுகள்
25.12.2022 ஞாயிற்றுக்கிழமை செங்கலடி, களுவன்கேணி, தளவாய் ஆகிய சபைகளில் வழமையான நேரத்திற்கு கிறிஸ்து பிறப்பு வழிபாடு நடைபெறும்
வேப்பவெட்டுவான் காலை 9.00 மணி (அருட்பணி.த.அதிஸ்கரன்)
நரிப்புல்தோட்டம் காலை 9.30 மணி (அருட்பணி.செ.பிறின்சன்)
ரமேஸ்புரம ; காலை 7.00 மணி (சகோத.ஏ.நித்தியகலா)
சேகர ஒன்றுகூடல்கள்
28.12.2022 புதன்கிழமை காலை 11.00 மணி வானவில் பணியாளர் வருடாந்த ஒன்றுகூடல் செங்கலடி
30.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி சேகர ஆண்கள் சங்க ஒன்றுகூடல் களுவன்கேணி
31.12.2022 சனிக்கிழமை இரவு 10.30 மணி, விழிப்பிரவு புதுவருட வழிபாடு எல்லா ஆலயங்களிலும் நடைபெறும
புதுவருட உடன்படிககை வழிபாடு
01.01.2023 செங்கலடி – காலை 6.15 மணி உதய வழிபாடு (அருட்பணி.செ.பிறின்சன்)
01.01.2023 களுவன்கேணி – காலை 6.15 மணி உதய வழிபாடு (அருட்பணி.த.அதிஸ்கரன்)
01.01.2023 ஞாயிறு காலை 8.00 மணி புதுவருட உடன்படிக்கை தளவாய் - (அருட்பணி.த.அதிஸ்கரன்)
01.01.2023 ஞாயிறு காலை 8.30 மணி புதுவருட உடன்படிக்கை வேப்பவெட்டுவான் - (அருட்பணி.செ.பிறின்சன்)
01.01.2023 ஞாயிறு காலை 9.30 மணி புதுவருட உடன்படிக்கை நரிப்புல் தோட்டம ; (அருட்பணி.த.அதிஸ்கரன் )
உடன்படிக்கை வழிபாடு
08.01.2023 செங்கலடி – காலை 7.30 மணி (அருட்பணி.செ.பிறின்சன்)
08.01.2023 களுவன்கேணி – காலை 7.30 மணி (அருட்பணி.த.அதிஸ்கரன்)
14.01.2023 சேகர ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களின் ஞானஒடுக்கம கல்குடா காலை 9.00 மணி