தளவாய் மெதடிஸ்த ஆலயம்
Punnakuda Rd, Thalavai, Chenkaladi, Batticaloa, Sri Lanka.
இலங்கை மெதடிஸ்த திருஅவை
செங்கலடி சேகரம்
தளவாய் திருச்சபை
23 வது ஆண்டு
நன்றி செலுத்தும் வழிபாடு
காலம் : 30.10.2022
நேரம் : காலை 08:30

வழிபாட்டு ஒழுங்கு
வணக்க அழைப்பு
கூட்டு பிரார்த்தனை - ஒளியே போற்றி ---
ஆரம்ப மன்றாடல்
ஆரம்ப பாடல் - 550 தந்தானை துதிப்போமே ---
துதிவேளை – மறவாமல் நினைத்தீரையா ---
பாவ அறிக்கை மன்றாடல்
திருமுழுக்கு ஆயத்தம் - பாடல் 493 அன்புள்ள ஆண்டவரே-
திருமறைப் பாடம்
பரிந்து மன்றாடல்
திடப்படுத்தல் - பாடல் - நான் நானாகவே ---
சபை வரலாறு
காணிக்கை – விசேட பாடல் - பிறந்த நாள் முதலாய்---
காணிக்கை மன்றாடல்
அருளுரை
திருவிருந்து பாடல் – 515 நண்பராய் அன்பராய் ---
நிறைவு மன்றாடல் ஃ ஆசீர்வாதம்
ஒளியே போற்றி
ஒளியே போற்றி போற்றி – எம்
இறைவா எழுவாய் போற்றி – 2
1. இருளில் விடிவாய் உதிப்பாய் போற்றி
இடறும் தீயை தகர்ப்பாய் போற்றி – 2
விழியின் வழியாய் ஒளிர்வாய் போற்றி
வழியில் வாழ்வாய் திகழ்வாய் போற்றி – 2
2. செவியில் வாக்காய் ஒலிப்பாய் போற்றி
செயலில் நலன்கள் விளைப்பாய் போற்றி – 2
சுமையில் துணையாய் வருவாய் போற்றி
சோர்வில் சுகமே தருவாய் போற்றி – 2
3. பசியில் உணவாய் கனிவாய் போற்றி
பழியில் பொறுத்தல் தருவாய் போற்றி – 2
அபயம் அளிக்கும் அன்பே போற்றி
ஆற்றல் அறிவின் ஊற்றே போற்றி – 2
4. படைப்பாய் வளர்ப்பாய் மீட்பாய் போற்றி
துடைப்பாய் கண்ணீர் தூயா போற்றி – 2
தந்தை தனயன் ஆவியே போற்றி
எந்தை முவோர் இறைவா போற்றி - 2
தந்தானைத் துதிப்போமே
தந்தானைத் துதிப்போமே திருச்
சபையோரே, கவி பாடிப்பாடி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிகமிகத்
1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குநின் கையைக் கூப்பித்துதி
செய்குவையே மகிழ்கொள்ளுவையே நாமும் - தந்தானைத்
2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக் கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்னேற் சோனாமாரி போற் பெய்துமே - தந்தானைத்
3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தமின்
ரத்தத்தை சிந்தி எடுத்து உயிர் வரம் - தந்தானைத்
4. தூரத்திரிந்த சீயோனே – உனை
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி யலங்கரித்து – உன்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னே - தந்தானைத்
மறவாமல் நினைத்தீரையா
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன் - என்னை
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் என்னை நினைந்து இதுவரை உதவினீரே
இரவும் பகலும் என்னை நினைந்து இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ.. ஆ..
கோடி கோடி நன்றி ஐயா – 2
எபிநேசர் நீர் தான் ஐயா இதுவரை உதவினீரே - 2
எல்ரோயி எல்ரோயி என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன் - 2
நன்றி நன்றி ஐயா ஆ.. ஆ..
கோடி கோடி நன்றி ஐயா – 2
தடைகளை உடைத்தீர் ஐயா தள்ளாட விடவில்லையோ – 2
சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே – 2
நன்றி நன்றி ஐயா ஆ.. ஆ..
கோடி கோடி நன்றி ஐயா – 2
– மறவாமல் நினைத்தீரையா
அன்புள்ள ஆண்டவரே
1. அன்புள்ள ஆண்டவரே – நான்
பண்புள்ள பாலகனாய் - என்றும்
தென்புடன் வாழ்ந்திடவே – உம்
அன்பினை தந்திடுமே
2. இந்தப் பாரினில் சிறு ஒளியாய் - என்னை
ஆக்கும் இயேசு நாதா – நான்
செல்கின்ற இடமெல்லாம் - ஒளி
வீசிடச் செய்யும் நாதா
3. மணம் வீசும் சிறு மலராய் - பிறர்
இன்புறச் செய்திடுமே
துக்கத்தில் ஆழ்ந்தவரை – மாற்றும்
பாடலாய் ஒலிக்கச் செய்யும்
4. கை கொடுக்கும் கோலாய் - நான்
என்றென்றும் விளங்கச் செய்யும்
மெய்யான வழியினிலே – நாம்
அயலாரை உதவச் செய்யும்
4. என்றென்றும் ஏறெடுப்போம் - உம்
பேரின்ப வீட்டினையே
கண்கொண்டு பார்த்திடுமே - இந்தப்
பாலரைக் காத்திடுமே
நான் நானாகவே
நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கின்றேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கின்றேன்
… நான் நானாகவே
2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப் போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்
… நான் நானாகவே
பிறந்த நாள் முதலாய்
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை
மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
நண்பராய் அன்பராய்
1. நண்பராய் அன்பராய் ஒருதட்டைச் சுற்றி,
பண்போடும் பணிவோடும் பகிர்ந்து நாம் உண்போம்
மண்ணகம் பார்த்து நற்படிப்பினை பெறவே,
விண்ணக விருந்தினை மகிழ்வுடன் உண்போம்
2. அறுசுவை கொண்ட நற் கருணையில் நாங்கள்,
பெறும் சுவை வாழ்வில் வளமானதன்றோ?
வேறு நினைவின்றி இயேசுவை எண்ணி,
மறுலோக வாழ்வின் அவையினைக் காண்போம்
3. பாத்திரம் ஒன்றில் அமுதெனத் தமது
உதிரத்தைத் தந்தார் விடாயினை விலக்க,
பத்தியத்தோடதைப் பருகியே, நாங்கள்
நித்தமும் நினது வாழ்வினை வாழ்வோம்
4. தூய தம் உடலினை தியாகமாய்க் கொடுத்தார்
காயம் நிறைந்த மானிடர் எமக்கு
ஆயர் பணிந்த இறைவனை இன்று நாம்
சேயார் பணிந்து உண்டு மகிழ்வோம்