எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர்

1926-04-21 - 2022-09-08


ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கும் அரியணைக்கும் வாழ்வை அர்ப்பணிக் உறுதியும் கடமை உணர்ச்சியும் கொண்டார்


https://www.tamil.bid/

உலக மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்குமா 2022 ?
பல்வேறு இன்னல்களுக்கும் வாழ்வின் சோதனைகளுக்கும் தப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு இன்னோர் இடியாய் வாழ்வில் இணைந்து கொண்ட இராட்சத நுண்ணுயிரியின் போராயுதம் பேரிடியாய் விளங்கிற்று சென்ற இரு வருடங்களாக.இவ்வருடமும் இந்நிலை தொடருமா இல்லை விட்டு விலகுமா என்ற கேள்விக்குறியே எந்த மனிதன் கண்ணிலும் காண்கின்ற விடயமாக உள்ளது. இப் புது வருடத்தில் இந்நிலை நீடிப்பது கூடாதென்பதே பலரதும் பேராசையாய் இருக்கும். மனிதனுக்கு நம்பிக்கையே சக மனிதன் தானே, ஆக இந்த விடயத்தில் ஒவ்வொர் மனிதனையும் ஆறுதல் படுத்தும் சக தோழன் அவன் சக மனிதனே. அவனையும் விட மனிதனை உலகில் தேற்றக்கூடியது யார் எனும் கேள்விக்கு விடையிருக்கின்றது. உலகில் தாயின் கருவில் இறைவன் என்ற நிலையை துறந்து மனிதனாக பிறந்த இரட்சகருக்கு இந்த இக்கட்டிலிருந்து விடுதலை தரக்கூடியதும் ஆறுதல் அளிக்கக்கூடியதும் நம்பிக்கை தருகிறதுமான வல்லமை உள்ளது. பிறந்த இப்புத்தாண்டு எப்போதும் போல புதிய எண்ணங்களையும் புதிய சிந்தனைகளையும் உலக மக்களுக்கு புதிதாக வாரி வழங்கி வருகின்றது. புத்தாண்டை நமக்கு பரிசளிக்க நம் பாவ எண்ணங்களை களைந்தும் நம் பாவ சிந்தனைகளை துறந்தும்விட நமக்காக பலியாக மாணடு பாவங்களை போக்கினார். புதிய வருடத்தில் நம்பிக்கை மற்றும் ஆறுதல் தரும் இறைவன் இயேசு கிறிஸ்து பாதம் பணிந்து அவர் பக்கமாய் நாம் திரும்புவோம். உலகம் தரக்கூடாத ஆனந்த பாக்கியம் அவராலே கிடைக்கும்.
Carousel imageCarousel image
Carousel imageCarousel imageCarousel image

வேதாகமத்தின் முதல் வசனம் எது ?

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

In the beginning God created the heaven and the earth.

கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிள் எனப்படும் பரிசுத்த வேதாகமத்தில் ஏன் இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன ? அவை ஏன் ஒரே காலத்தில் எழுதப்படவில்லை ?

ஆம் கிறிஸ்தவர்களின் வேதத்தில் இரு பெரும் பிரிவுகள் உள்ளது. ஒன்று பழைய ஏற்பாடு, மற்றையது புதிய ஏற்பாடு. இரண்டும் எழுதப்பட்ட காலங்களும் பல ஆயிரம் வருட இடைவெளி கொண்டமைந்துள்ளது,

ஏன் வேதத்தில் இரு பிரிவுகள் உள்ளது என ஆராயும்போது அது சிறு பிள்ளைகள் கூட விளங்கிக் கொள்ளத்தக்கதாக உள்ளது, இரண்டு கால யுகங்கள் அங்கு இரண்டு பிரிவாய் உள்ளது, பழைய ஏற்பாடு கிறிஸ்து வர முன் நடைபெற்றவற்றையும், புதிய ஏற்பாடு கிறிஸ்து பிறப்பதிலிருந்ததான வரலாற்றையும் எடுத்தியம்பி நிற்கின்றது. முற்காலத்தில் நடைபெற்றவை பழைய ஏற்பாட்டிலும் பிற்காலத்தில் நடைபெற்றவை புதிய ஏற்பாட்டிலுமுள்ளது. இது இரு பெரும் பிரிவுகள் என சொல்ல முடியாதபடி காலத்தால் இணைக்கப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். காலத்தின் இடைவெளியினாலேயே இரு பெரும் பிரிவுகளாக தோற்றம் பெற்றுள்ளது.

இரண்டு கால யுகங்களின் வரலாற்றை ஒரே நேரத்தில் எழுதி விட முடியாதல்லவா ? இது வானத்தில் இருந்து குதித்த புத்தகம் அல்ல. நாற்பது மனிதர்கள் இறைவனது சித்தத்தை வேறுவேறுபட்ட காலங்களில் அறிந்து எழுதியுள்ளனர். ஆகவே இது ஒரே நாளில் மனித கரங்களில் கிடைத்து விடவில்லை. பகுதி பகுதிகளாகவே மனிதருக்கு கிடைத்த பல புத்தகங்களின் தொகுப்பே பரிசுத்த வேதாகமம் எனப்படும் பைபிளாகும். நாற்பது மனிதர்களது எழுத்தாக்கமும் ஒரே இறைவனது விருப்பத்தை சொல்லி நிற்கின்றது என்பதே புதுமை.

முதல் மனிதன் எவ்வாறு உருவானான் ?

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.

பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், பூமிக்குத் திரும்புமட்டும் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய், நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்

விஞ்ஞானம் கூறும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையான கூர்ப்பு கொள்கைக்கு மாறாக கிறிஸ்தவர்களின் வேதத்தில் மனிதன் இறைவனால் உருவாக்கப்பட்டான் என்று கூறுவது சரியா ?

விஞ்ஞானம் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றதே தவிர கிறிஸ்தவம் எப்போதோ வளர்ந்து விட்ட மாமரம். கிறிஸ்தவம் பல நுாற்றாண்டுகளுக்கு முன்னமேயே மனிதன் உருவான விதத்தை கூறி விட்டது என்பது உண்மைதான். விஞ்ஞானம் உருவானதே கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்., 1850 களில் தான் .

150 வருட விஞ்ஞானம் 5000 வருடத்திற்கும் மேலான பழமையான கிறிஸ்தவத்தின் கொள்கையை மாற்றி விட முடியுமா ? ஆக விஞ்ஞானத்தின் கொள்கையானது மனிதனின் அறியாமைக்கு எடுத்துக்காட்டு.

பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாக மனிதனையும் மிருகங்களையும் தேவன் மண்ணினாலே உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. நாயை போன்று பூனை, பூனை போன்று யானை, ஒவ்வொன்றுக்கும் சின்ன சின்ன வித்தியாசங்கள் கொண்டு இறைவன் படைத்திருக்க நாயிலிருந்து பூனையும் அதிலிருந்து யானையும் வந்தது என கூற முடியுமா ? மனிதன் போன்று குரங்கும் நடக்கும் வண்ணம் இறைவன் மண்ணினால் படைத்ததை விட பரிணாமக் கொள்கை தான் முக்கியமாய் தெரிகிறது அஞ்ஞானிகளுக்கு.

கடைசியாக தேவன் மனிதனிடம் கூறியது - பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், பூமிக்குத் திரும்புமட்டும் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்,

உலகின் முதல் தேசம், பட்டணம், ஜாதி எப்படி வந்தது ?

நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.

யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.


காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள். கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று. சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.

அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம். மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும், பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான்.

கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும், அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள். கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது. இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார்.


சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான். சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள். ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள். அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான். யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர். இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது. இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.

தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.


ஆதியாகமம் 10

இஸ்ரவேலின் ஆரம்பமும் யூதரின் முதல் தகப்பன் யார் ?

கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான்தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமி மட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள். கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான். அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்துதேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.

ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள். ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

ஆபிராம் கானான்தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார். அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.

அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

கடவுள் விதித்த முதல் கட்டளை எது ?

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

கொலை செய்யாதிருப்பாயாக.

விபசாரம் செய்யாதிருப்பாயாக.

களவு செய்யாதிருப்பாயாக.

பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக

கிறிஸ்தவர்களின் இறைவனான இயேசு கிறிஸ்து, இஸ்ரவேலரான யூதர்களின் தேவனால் கட்டளையிடப்பட்ட கட்டளைகளை மதித்து நடந்தாரா ? ஏன் அவரை இஸ்ரவேலரான யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ?

இயேசு கிறிஸ்து உலகிற்கு வர முன்னரே யூதர்களுக்கு தேவனால் கட்டளைகள் கொடுக்கப்பட்டிருந்தன என்பது உண்மையான விடயமாகும். இயேசு யூத ஜாதியில் வந்ததின் காரணத்தினால் அவர் ஏக தேவனின் கட்டளைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகவே இருந்தது. அந்த கட்டளைகளை இயேசு ஒருபோதும் மரணம் வரை கூட விட்டுவிடவில்லை. பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட அத்தனை கட்டளைகளையும் வாழ்வின் இறுதிவரை செய்து நிறைவேற்றினார் என்றே புதிய ஏற்பாடு கூறுகின்றது. ச

யூதர்களை பொறுத்தவரை பழைய ஏற்பாட்டில் வருகின்ற சட்டதிட்டங்கள் அவர்களது பாட்டன் பூட்டனின் சேர்க்கப்பட்ட பாரம்பரிய அந்நிய பழக்கவழக்கங்கள் கொண்டு வாய்வழி மாற்றங்கள் நிறைய காணப்பட்டன. தேவனின் கட்டளைகளுக்கு நேரடியான அர்த்தம் கற்பிப்பதை விட தாங்கள் உணரும் வண்ணம் செய்யலாம் என்ற மனித ஆசைகளுக்குள் சிக்குண்டிருந்தார்கள். சரீரத்தில் செய்தால் பாவம் என தேவன் கூறியவற்றை மனதால் அனுபவிக்கலாம் எனும் மோசமான பாவ வழிக்குள் சிக்கியிருந்தனர். இயேசு இவைகளை கண்டித்ததால் அவர்கள் இயேசுவை வெறுத்து ஒதுக்கித் தள்ளினார்கள்.

உதாரணமாக விபச்சாரம் செய்யாதே என்ற தேவனின் கட்டளையை எடுத்துக்கொண்டால் அது சரீரத்தால் செய்தால் பாவம் என்பதால் அதை மனக் கற்பனையாக செய்தனர். ஆகவே இயேசு மனதால் கூட ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கக் கூடாது என்பதற்காக கண்களின் பார்வையின் இச்சை மூலம் பாவம் வருவதாக கூறி அப்படி செய்ய விடாது தடுத்தார். யூதர்கள் கட்டளையை இலகுவாக்கி வேறு விதமாக செய்ய முயன்றனர். இயேசு அதின் ஆபத்தை எடுத்துரைத்தார். ஆகவே இயேசு கட்டளையின் பாரத்தை அதிகமாக்கினதினால் யூதர்கள் அவரை வெறுத்தனர். அவரது கண்டிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

முதல் கப்பல் யாரால் கட்டப்பட்டது ?

நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு. நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்க வேண்டும். நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்து முடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ண வேண்டும். நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது. உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.

நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

வானவில் எவ்வாறு தோன்றுகிறது ?

நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.

அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.

அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.

கிறிஸ்தவ தளங்கள்

இலவச விளம்பரங்கள் பிரசுரிக்க வட்சப் +94654314050 Message on WhatsApp ற்கு அனுப்பி வைக்கலாம்.

எமது வாசகர்களுக்கு, ஆசீர்வாதமான புதிய ஆண்டு நல்வாழ்த்துக்கள்கர்த்தர் தாமே இப்புதிய 2022ம் வருடத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவும், ஆசீர்வதிக்கவும் செழிக்கவும் செய்வாராக,
Connect with Facebook FACEBOOK MESSENGER - Chat with admin Click hereConnect with Whatsapp WHATSAPP - Chat with admin Click here Send Email Click here

வீடியோ

வேதாகமம்

பழைய ஏற்பாடு

புதிய ஏற்பாடு

TwitterFacebook