வேப்பவெட்டுவான் மாணவர்களுக்கு மிதிவண்டி

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட உள்ளது. 

இதனை வேப்பவெட்டுவான் மெதடிஸ்த திருச்சபை ஒழுங்குபடுத்தியுள்ளது.

இரண்டாம் கட்டமாக கரடியன்குளம், மாவடியாேடை, வேப்பவெட்டுவான், பாலர்சேனை, இலுப்படிசேனை பிரதேசங்களில் வாழும் 57 சிறுவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்படவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதற்கட்டமாக நுாற்றுக்குமதிகமான சைக்கிள்கள் இப்பிரதேச சிறுவர்களுக்கு கம்பக்ஷன் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்,