ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிரடி - அமைச்சரவைப் பத்திரம்

Sri lanka News ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும்  முன்னாள் ஜனாதிபதிகளினதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கான குழு நியமிக்கப்படவுள்ளது.

சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா - இந்தியா

சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையை இந்தியா விரைவுபடுத்தும்

தொலைத்தொடர்பு முதல் எஃகு பொருட்கள் மற்றும் சோலார் பேனல்கள் வரையிலான தொழில்களில் உள்ள இந்திய உயர் தொழில்நுட்ப உற்பத்தி அலகுகளில் நிறுவப்பட்ட சீன தயாரிப்பு இயந்திரங்களை இயக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை.

உயர் தொழில்நுட்ப எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க 24 பில்லியன் டாலர் திட்டத்தில் 14 துறைகளில் நிறுவப்பட்ட சீன தயாரிப்பு இயந்திரங்களை இயக்க தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விரைவான வணிக விசா வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sri lanka News அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆள்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட் புதிய அடையாள அட்டை 

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சாவச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதன் பின்பு ஏற்பட்ட பிரச்சனைகள்

Sri lanka News சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,

சாவச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டதன் பின்பு ஏற்பட்ட பிரச்சனைகள்  யாவரும் அறிந்த ஒன்று. இவ்விடயம் தொடர்பான தவறான புரிதல்கள் பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதனால் அது பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம்.

தனிப்பட்ட ஒரு மருத்துவரின் நிர்வாகம் சார்ந்த பிரச்சனை ஒட்டுமொத்த வைத்திய சமுகத்தையும் பாதித்துள்ளது. எனவே  உண்மை நிலையை எடுத்துரைப்பதோடு அறிவுக் கண்கொண்டு இவ்விடயத்தை பொதுமக்கள்  அணுக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவியேற்ற பின்னர் அங்கு கடமையாற்றிய அனைத்து வைத்தியர்களும் ஒருமித்த குரலில் வைத்தியசாலையை விட்டு வெளியேறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்றும் காலக்கெடு இன்றி விடுதியில் இருந்து கடமையாற்றிய வைத்தியர்களை உடனடியாக வெளியேற்றும் சர்வாதிகார முறையினை பிரயோகித்தது சரியா எனவும் நீங்கள் ஏன் சிந்திக்க மறந்தீர்கள் ?

ஒரு வைத்தியராக நோயாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பான சிகிச்சையை வழங்க முடியாமல் போகும் பட்சத்தில் தொடர்ந்து அங்கு பணியாற்றுவது என்பது முடியாத ஒன்று.  நோயாளர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத  நிலையில் அங்கு பணியாற்ற முடியாத நிலைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரம் உடனடியாக பணிப்புறக்கணிப்பையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. 

தான் கடமையேற்ற இரண்டு மணித்தியாலங்களில் வைத்தியர்கள் தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியேறுமாறு அவர் பணித்துள்ளார். மகப்பேற்று விடுமுறையில் இருந்தவர்கள் என்று கூடக் கருதாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் கட்டாய இடமாற்றத்திற்கு வைத்தியர்களை உள்ளாக்கியுள்ளார். வைத்தியர்களது மூடப்பட்டிருந்த  விடுதிகளை உடைத்து தன்னகப்படுத்தியுள்ளார்

இவரது அதிகார தோரணைகளையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்ட வைத்தியர்களை உளரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் படியான தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசியதுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய இடமாற்றங்களையும் வழங்கியுள்ளார். இதனால் வைத்தியர்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

வைத்தியர்கள் மீது இவர்  கொண்டிருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளே இவரது சர்வாதிகாரத்தனமான செயற்பாடுகளுக்குக் காரணமாகியுள்ளது. இவற்றை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி பொறுமை காத்து வந்தனர் சாவச்சேரி வைத்தியர்கள்.

அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகளை மின் பிறப்பாக்கி வசதியற்ற கட்டடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளையில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே பாதுகாப்பாக இக்கட்டடத்தை மீள ஆரம்பிப்போம்  இல்லையெனில் அதற்கான மாற்று ஏற் பாடுகளை மேற்கொள்வோம் என வைத்திய நிபுணர்கள் அறிவுரை கூறியபோதும் அவசர அவசரமாக தன்னிச்சையான முடிவுகளை எடுத்து  இடமாற்றியுள்ளார்.

இரண்டாம் மாடிக்கு மாற்றப்பட்ட மகப்பேற்று விடுதிக்குப் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணியை மின்தடை காரணமாக மேலெடுத்துச் செல்ல முடியாத நிலையில்  சாதாரணமாக மேற்கொள்ள வேண்டிய பிரசவத்தையும் செய்ய முடியாத நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வழமையாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசவத்தையும் அங்கு நடத்த முடியாதவாறே இவர் பணியாற்றியுள்ளார். 

இவற்றையெல்லாம் ஏற்கனவே எதிர்வுகூறித் தான் வைத்திய நிபுணர்கள் அவருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கியிருந்தனர். இவரது பொறுப்பற்ற செயல்களினால் பாதிக்கப்பட்டது பொதுமக்களே.

இதன் பின்பே வைத்தியர்கள் தங்களது பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளரை அணுகினர். அவர்களும் அங்கு விஜயத்தை மேற்கொண்டு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மாகாணப் பணிமனைக்கு மாற்றலாகுமாறு பணித்து இருபத்தினான்கு மணி நேரம் நிறைவுற்றும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதால் தொழிற்சங்கமாகிய அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாட்டிற்குள்ளாக்கப்பட்டோம்.

நாம் நமது தொழிற்சங்க கூட்டத்தை நடாத்துகின்ற இடத்தில் இவர் காணொளி எடுத்து எமது கூட்டத்தை குழப்பும் நோக்கத்தோடு செயற்பட்டதாலேயே இவரது கைபேசி தட்டி விடப்பட்டு  அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாறாக இவர் கூறுவது போன்று எவரும் அங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

வைத்தியர்கள் அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை அறிந்து ஆதாரங்களற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை  மேலதிகாரிகள் மீதும் வைத்தியர்கள் சமுகத்தின் மீதும் சுமத்தி மக்களை தன் வசப்படுத்தி தன்னை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இவர் நன்கு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றார். வைத்தியர்கள் மீது சுமத்தப்படுகின்ற ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்துமே  இவரது கபட நாடகமே.

இவர் வன்முறைகள் நடந்ததாக கூறி  பொதுசன ஊடகங்களை தவறான முறையில் பாவித்து தனக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள இவரால் கூறப்பட்டவை இவரது கட்டுக் கதைகளும் கற்பனைகளுமே தவிர எந்தவித வன்முறைச் சம்பவங்களும் அன்று வைத்திய சாலையில் நிகழவில்லை .

வைத்தியர்கள் அவருக்கு எதிரான முறைப்பாடுகளை முன்னெடுப்பதை அறிந்த வைத்தியர் ஆதாரங்கள் அற்ற பிழையான சாத்தியமற்ற குற்றச்சாட்டுகளை தனது மேலதிகாரிகள்மீதும் வைத்தியர்கள் மீதும் சுமத்தி மக்களை திசை திருப்பி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள புத்திசாதுரியமாக முனைக்கின்றார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள் நியாயமான திணைக்கள ரீதியான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை எப்போதும் மேற்கொண்டு வருவதோடு ஊக்கப்படுத்தியும் வருகின்றோம்.

வைத்தியர்களுக்குள் நடக்கும் உட்பூசல்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் தீய சக்திகள் மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்பி வசை பாடவைத்து தமது அரசியல் கபட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இன்று வரை எத்தனை நோயாளிகள் அதி தீவிரத்தன்மையுடன் வருகை தந்து தமக்கான மருத்து சிகிச்சைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர. ஆளணிப் பற்றாக்குறை, கட்டமைப்பு ரீதியிலான சிக்கல் வாய்ந்த தன்மை, பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கு     மத்தியில் அங்கு பணியாற்றி வருகின்ற வைத்தியர்கள் அர்ப்பணிப்புடனும் தம்மை நாடிவரும் நோயாளர்களுக்குத் தேவையான சேவைகளை திறம்பட ஆற்றி வருகின்றனர். 

வைத்திய நிர்வாகியான இராமநாதன் அர்ச்சுனா ஏனைய வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் முன்னுதாரணமாக செயற்படுவதை விடுத்து நோயாளர்களது உணவைத் தான் உண்பது, வேலை நேரங்களில் சமூக வலைத்தளங்களினைப் பயன்படுத்தல், தனது உயர் அதிகாரிகளின் கட்டளைகளை மீறுதல், வைத்தியசாலை  விடுதிகளை தன்னகப்படுத்தல், தனக்கு நியமிக்கப்பட்ட நியமனத்திற்கு செல்லாமல் சாவகச்சேரி வைத்தியசாலையின் சாதாரண செயற்பாடுகளுக்கு ஊறு விளைவித்து வருகிறார்.

தான் இதுவரை பெற்றுக் கொள்ளாத பட்டத்தினை தனது அலுவலக முத்திரையாகவும், அலுவலக ஆவணங்களிலும் பயன்படுத்துவதென்பது சட்டப்படி பாரிய குற்றமாகும்.

இவ்வாறு அரச சேவையில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் செய்வாராயின்  நாட்டின் நிலைமை என்னவாகும்?

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மாற்றப்பட்டு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டதன் பின்பு வைத்தியசாலை நடவடிக்கைகள் யாவும் சுமுகமான நிலைக்குத் திரும்பியுள்ளமை நீங்கள் யாவரும் அறிந்த வொன்று.

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வைத்தியசாலை விடுதியை மீள ஒப்படைக்காமல் அங்கு தங்கியிருந்து வைத்தியசாலைக்குள் வெளியாட்களை  அழைப்பது ,சமூக வலைத்தளப் பதிவுகளூடாக மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்ப முனைவது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வைத்தியசாலையில் கடமையில் இருக்கும் வைத்தியர்களும் விடுதியில் உள்ள வைத்தியர்களும் சாதாரண செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாது சிரமங்களை ஏற்படுத்துவதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றது. 

இவ்விடயம் தொடர்பாக மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் நாம் வைத்தியசாலை நடவடிக்கைகளை சுமுகமாக்குவதற்கும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

இவ்விடயம் தொடர்பாக பொது மக்களாகிய தாங்கள் அறிவுக் கண்கொண்டு சிந்தித்து செயற்படுமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள்  வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனாவிடமிருந்து இன்று 17/7/2024 காலை 8 மணிக்கு முன்பு வைத்தியசாலை விடுதியை பெற்று,  வைத்தியசாலை சேவையை சுமூகமாக இயங்குவதற்கும் வைத்தியர்களிற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க தவறின் நாம் எமது உறுப்பினர்களாகிய வைத்தியர்கள் அனைவரையும் காலை 8 மணி முதல் வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனா விடுதியை ஒப்படைத்து வெளியேறும் வரை தொழிற்சங்க போராட்டமாக யாழ் .பிராந்திய சுகாதார பணிமனையில் இணைக்கவுள்ளோம் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். - என்றுள்ளது

United States Senator from New Jersey - Bob Menendez

Brandon Johnson Mayor of Chicago

J. D. Vance American conservative commentator, politician, venture capitalist and author

Amber Rose Levonchuck is an American model, rapper and television personality

ஹமாஸ் குழுவை அர்ஜென்டினா அரசு சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது

பாலஸ்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸை "சர்வதேச பயங்கரவாத அமைப்பாக" அர்ஜென்டினா அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவும் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றன.

"ஹமாஸ் குழுவை அர்ஜென்டினா அரசு சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது" என்று ஜனாதிபதி ஜேவியர் மிலியின் அலுவலகம் வெள்ளிக்கிழமை இரவு அறிக்கையில் கூறியது,

ஈரானுடனான ஹமாஸின் "இணைப்பை" மிலேயின் அலுவலகம் கண்டித்தது.

ஜனாதிபதி கத்தோலிக்கராக வளர்ந்தார், ஆனால் ஆர்த்தடாக்ஸ் யூத சிந்தனையில் ஆர்வத்தை வெளிப்படுத்தினார், தொடர்ந்து ஒரு ரபியுடன் ஆலோசனை செய்து, கடந்த ஆண்டு தன்னை "தோரா அறிஞர்" என்று விவரித்தார்.

இஸ்ரேலுக்கான அவரது உறுதியான ஆதரவு அர்ஜென்டினாவின் யூத சமூகம் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.

அர்ஜென்டினா லத்தீன் அமெரிக்காவில் மிகப்பெரிய யூத சமூகத்தைக் கொண்டுள்ளது, சுமார் 300,000 உறுப்பினர்கள் உள்ளனர். இது மத்திய கிழக்கிலிருந்து - குறிப்பாக சிரியா மற்றும் லெபனானில் இருந்து குடியேறிய சமூகங்களின் தாயகமாகவும் உள்ளது.

இஸ்ரேலின் பலஸ்தீனத்தில் மதிப்பிழக்கும் ஹமாஸ

இஸ்ரேலின் பலஸ்தீன பிராந்தியத்தில் சர்வாதிகாரமாக ஆட்சி செய்கின்ற ஹமாஸ் மதிப்பிழக்கும் காட்சியை கண்டு  இஸ்ரேலிய பலஸடதீனர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இஸ்ரேலிய குடிமக்கள் யூதர் மற்றும் பலஸ்தீனர், இவர்களில் பலஸதானியர்களை சுயாட்சி செய்யும் ஹமாஸூ சர்வாதிகார போக்கில் தாேற்று போய்க் கொண்டிருக்கின்றது,

சிறுவர் மருத்துவமனை மீதான தாக்குதல்

ரஷ்யா படை தாக்குதலினால் யுக்ரேனிய சிறுவர் மருத்துவமனை தாக்கப்பட்டு 40ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலியாக்கப்பட்டுள்ளனர்.

TamilbidMag June2024.pdf

குழம்பும் கென்யா

பாராளுமன்றத்தை தாக்கிய கென்ய மக்கள், கென்ய குடிமக்கள் நைரோபியில் நாட்டின் முன்மொழியப்பட்ட 2024 நிதிச் சட்டத்தை நிராகரித்து போராட்டங்களை நடத்துகின்றனர். நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கென்யா பெரும்பாலான புதிய வரி உயர்வுகளை ரத்து செய்தது. செவ்வாயன்று ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கென்யாவின் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு வரி முன்மொழிவுகளை எதிர்த்தனர், கட்டிடத்தின் ஒரு பகுதியை எரித்தனர், சட்டமியற்றுபவர்களை தப்பியோட அனுப்பினார்கள் மற்றும் அமைதியின்மையில் காவல்துறையினரிடம் இருந்து துப்பாக்கியால் சுட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.

வடகொரிய நோக்கிய பயணத்தை ரஸ்ய அதிபர் மேற்கொண்டுள்ளது மேற்கத்தை நாடுகளுக்கு உன்னிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. மேற்குலகை எதிர்க்கும் இருநாட்டு கொள்கைகளும் ஒன்றிணைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

அக்டோபர் 7 முதல் யூத சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள்

வடக்கில் ஹெஸ்பொல்லாவுடன் தீவிரமடைந்துள்ள போர்.  ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்: “காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும். லெபனான் மற்றொரு காஸாவாக மாற முடியாது.

மாண்ட்ரீலின் மைல் எண்டில் உள்ள யூதர்களுக்குச் சொந்தமான ஃபலாஃபெல் உணவகம் தாக்கப்பட்டது, மேயர் வலேரி பிளான்டே இது ஒரு வெறுப்புக் குற்றம் என்று கண்டனம் செய்தார். அதிகரித்துள்ளன.

ரஷ்யாவின் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள டெர்பென்ட் பகுதியில் உள்ள ஒரு யூத ஆலயம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து தீப்பிடித்து எரிகிறது.

பலியாகும் ஜிகாத் தலைமைகள்

ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது தாக்குதல். 

பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக பல பயங்கரவாத சதித்திட்டங்களைத் திட்டமிடுவதில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்களில் சிலர் பிணைக் கைதிகளை வைத்திருப்பதில் ஈடுபட்டு அக்டோபர் 7 ஆம் தேதி படுகொலைகளில் ஈடுபட்டனர்.

ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு சர்வதேச சட்டத்தை தொடர்ந்து மீறுகிறது, அதே நேரத்தில் இஸ்ரேல் அரசுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் கட்டிடங்களையும் பொதுமக்களையும் மனிதக் கேடயங்களாக திட்டமிடுகிறது.

பின்யாமினில் உள்ள சில்வாட் கிராமத்தில் ஒரு படைப்பிரிவு நடவடிக்கையில், மூன்று தேடப்படும் போராளிகளை கைது செய்தனர், பல சந்தேக நபர்களை விசாரித்தனர் மற்றும் வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நேற்று இரவு, இஸ்ரேலிய விமானப்படை , பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் உற்பத்தித் தலைமையகத்தில் திட்டங்கள் மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பயங்கரவாதி முஹம்மது சலாவைக் கொன்றது.

இஸ்ரேலிய விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் விமானங்கள் காசா பகுதியில் உள்ள பல பயங்கரவாத இலக்குகளை தாக்கின, இதில் சுரங்கப்பாதைகள், ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் மற்றும் பிற பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அடங்கும்.

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் இரவு முழுவதும் தாக்கின. 24/06/2024

ஹமாஸ்

காசா நகரில் ஹமாஸ் தளபதி ராத் சாத் மீது இஸ்ரேலிய தாக்குதல். அவரது மரணம் ஹமாஸ் தலைமைக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாகும். 24/6/24

7வது ஹமாஸ் படைத் தளபதி துல்லியமான வான்வழித் தாக்குதலில் வெளியேற்றப்பட்டார்

வடக்கு காசாவின் பெய்ட் ஹனூனில் வான்வழித் தாக்குதலின் போது ஹமாஸின் உயரடுக்கு நுகா படையின் தளபதியான அஹ்மத் ஹசன் சலாமே எ-ஸ்வர்கே சமீபத்தில் நீக்கப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது. 20/6/24

ஹிஸ்புலா

ஃபட்ல் இப்ராஹிம் ஹெஸ்பொல்லாவின் ஜூவாய்யா பிராந்தியப் பிரிவின் செயல்பாட்டு அதிகாரியாக இருந்தார், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்ரேலிய போர் விமானங்கள் ரிஹானில் உள்ள ஹெஸ்பொல்லா தரையிலிருந்து வான் ஏவுகணை ஏவுகணையை குறிவைத்தன, 20/06/24

ஹூதி

கடந்த வாரம், ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் TUTOR கப்பலைத் தாக்கினர், பிராந்திய கடல் மோதல்களை அதிகரித்தனர் மற்றும் முக்கிய வர்த்தக பாதையில் வணிகக் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தினர்.

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை நான் ஆதரிக்கிறேன்

ரஸ்யா உக்ரைன் யுத்தத்தை கண்டுகொள்ளாத உலகம், இஸ்ரேல் உள்நாட்டு போரில் தலையீடு செய்வது நிறுத்தப்பட வேண்டும்

காஸா இஸ்ரேலின் உள்நாட்டு பிரச்சினை. அதில் தலையீடு செய்வதால் ஐநா சபை தவறிழைக்கின்றது.  ரஸ்யாவின் அதிபர் புட்டின் தீவிரவாதி, இஸ்ரேலின் ஜனாதிபதி ஜனநாயகவாதி என்பதை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே உண்மை. 

சமீபத்தில் பல ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளன. இந்நாடுகள் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. 

நஃப்தலி பென்னட் பிரதமராக்க மிகவும் பொருத்தமானவர் 

பெஞ்சமின் நெதன்யாகுவை விட (36% எதிராக 28%) நஃப்தாலி பென்னட் இப்போது பிரதமருக்கு மிகவும் பொருத்தமானவர் என்று மிட்காம் இன்ஸ்டிடியூட் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்துகிறது. பென்னட்டின் COVID-19 பதில் மற்றும் கூட்டணி முயற்சிகள் பாராட்டப்படுகின்றன. நெதன்யாகுவின் போர் செயல்திறன் 63% குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அவர் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகராக இருக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷய்கு மற்றும் இராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியப் போரின் போது ரஷ்யர்கள் உக்ரேனிய மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  போர் நடந்து கொண்டிருப்பதே விளாடிமிர் புட்டின் கைது செய்ய காரணம் எனப்படுகின்றது.