World News: Tamil Advertisement Web Page
மரணம் மனிதர்களுக்கு உலக வாழ்வின் முடிவாக உள்ளது. ஆனால் மனிதர்களுக்கு முடிவாக இருந்த மரணம் இனி முடிவாக இருக்கப் போவதில்லை. காரணம் இயேசு கிறிஸ்து மரணத்தை மேற்கொண்டு ஜெயம் பெற்றார். மரணத்தை தோற்கடித்தார்.
சாத்தானின் சூழ்ச்சியால் மனிதன் தனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மிகுதியான ஆசீர்வாதங்களை இழக்க நேரிட்டது. இடம், உணவு, ஓய்வு, நித்திய வாழ்வு போன்றவற்றை இழந்தான்.இவை மனிதனுக்கு மிகுந்த பேரிழப்பாக இருந்தது.
எல்லாவற்றையும் இழந்த மனிதன் பல ஆண்டுகளாக சாத்தானின் பிடியில் சிக்கி கிடந்து வந்தான். அவனை மீட்பதற்கு யாராலும் முடியாது இருந்தது. ஏனென்றால் அவன் தனது சுய விருப்பின் பேரிலேயே சாத்தானின் தந்திரத்திற்கு இடம் கொடுத்திருந்தான். அதனால் அவனை சாத்தானிடமிருந்து மீட்டு கொள்வதற்கு இறைவன் இறங்கி வர வேண்டி இருந்தது
மனிதர்களை விடுவித்த இயேசுவுக்கு மரணம் சவாலாக அமையவில்லை. மூன்று நாட்களில் மரணத்திற்கு சவால் விடுத்து தன்னை உயிருள்ளவராக உலகிற்கு வெளிப்படுத்தினார்
இவ்வாறாக உலகத்திலிருந்த சாபத்தை வியாதியை நோயை அழித்து போட்டவராக உலக மக்களை உலக ஆசாபாசங்களிலிருந்து மீட்டு தமக்கான ஜனங்களாக மாற்றிக்கொண்டார்.
ஆமென்.