சிலுவையில் வெற்றியை நிலை நிறுத்திய இயேசு - உலக மனிதர்களுக்கு வெற்றி

சிலுவையில் வெற்றியை நிலை நிறுத்திய இயேசு


மானிடக் கண்களுக்கு தோல்வியைப் போல சிலுவை மரணம் காணப்பட்டாலும் ஆவிக்குரிய உலகில் கிறிஸ்து இயேசு சாத்தானை ஜெயித்து வெற்றி பெற்றார்.


பல வருடங்களாக யூதர்களின் பஸ்க்கா பண்டிகையில் அடிபட்ட ஆட்டுக்கு பதிலாக இந்த பஸ்கா பண்டிகையில் இறைவன் மனிதனாக பலியானார். மனிதனுடைய பாவங்களை முழுமையாக தீர்க்கும் வல்லமை மானிடனாக வந்த இறைவனுக்கே இயலுமாக இருந்தது.


சாதாரண மனிதர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மரணம் வாழ்வின் விடுதலையாக இருந்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாத போது அதை தோல்வியாக சிந்திக்கின்றனர்.


இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை ஏற்றுக் கொள்கின்ற மானிடர்கள் நித்திய வாழ்வு பெற்றுக் கொள்ளும் அரிய சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டு இவ்வுலக வாழ்வை விட மேலான வாழ்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்கின்றனர். இது வெற்றியான வாழ்க்கை அல்லவா? இது நிரந்தரம் அல்லவா?


சாத்தானின் தலையை இயேசு சிலுவையிலே நசுக்கினார். சாத்தானால் அவருடைய குதிகாலை மட்டுமே நசுக்க முடிந்தது. ஆனால் இயேசு பிசாசாகிய சாததானின் முழு அதிகாரத்தையும் சிலுவையிலே நமக்காக மரித்ததன் மூலம் எடுத்துப் போட்டார் எடுத்துப் போட்டு விட்டார்.


இனி சாத்தானுடைய அதிகாரங்கள் செயல்பட போவதில்லை. அவனுடைய தலை நசுக்கப்பட்டு விட்டது. பிசாசு தோற்றுப் போய் விட்டான். மனிதர்களை ஏமாற்றிய பிசாசு தோற்கடிக்கப்பட்டாயிற்று. இனி பிசாசு முன்னர் போல செயல்பட முடியாது.


பிசாசின் சகல அதிகாரங்களையும் இயேசு கைப்பற்றிக் கொண்டார். மனிதர்களை ஏமாற்றிய பிசாசு தோற்கடிக்கப்பட்டு விட்டாள். இனி மனிதர்களோடு பிசாசு செயல்பட முடியாது. 


மனிதர்களுக்கு முழுமையான வெற்றியை இயேசு சிலுவையில் ஏற்படுத்திக் கொடுத்து விட்டார். ஆகவே மனிதர்களுக்கு சிலுவை வெற்றியின் சின்னம். பிசாசுக்கு தோல்வி.


சிலுவையானது உலக மக்களுக்கு இயேசுவின் வெற்றியை கொண்டாடும் புனித சின்னமாக காணப்படுகிறது. பிசாசாகிய சாத்தான் தோல்வியுற்றதின் அடையாளம் சிலுவை.


பிசாசு தோற்றதற்கான அடையாளமாக சிலுவை காணப்படுகிறது. இதை மறைப்பதற்காக அநேக மனிதர்கள் இன்றும் பிசாசுக்காக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களும் பிசாசோடு சேர்ந்து மரண வாசலான நரகத்திற்கு தள்ளப்படுவார்கள்.


பிசாசை நரகத்துக்கு தள்ளி இயேசு மேற்கொண்ட சிலுவையின் வெற்றி மானிடர்கள் ஆகிய எமக்கு மிகப்பெரும் வெற்றி விழாவாக கொண்டாட வேண்டியதாக இருக்கிறது.


சிலுவை மனிதர்களுக்கு வெற்றியின் சின்னம். சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்தவர்களுக்கு உலக மக்களுக்கு வெற்றியின் வழி.


கிறிஸ்துவோடு சேர்ந்து நாமும் வெற்றியை கொண்டாடுவோமாக.


இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.