World News: Tamil Advertisement Web Page
உலகின் பல நாடுகளும் கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடிய அதே வேளையில் இயேசு உயிரோடிருக்கின்றார் என்ற செய்தி உலக மக்கள் மத்தியில் கடந்து சென்றது.
இயேசு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்ற உண்மையை மறைப்பதற்கு பல சக்திகள் உலகெங்கும் எழும்பின. எழும்பிக் கொண்டிருக்கின்றன.
எத்தனை எதிரான சக்திகள் இயேசுவின் உயிர்த்த சம்பவத்தை மறைக்க முயன்ற போதிலும் இயேசு உயிர்த்தெழுந்த சத்தியத்தை அசத்தியமாக்க முடியவில்லை.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த செய்தியை மறைக்க பல சக்திகள் உலகில் மூலை முடுக்குகளில் எல்லாம் தோன்றி மறைகின்றன.
இலங்கையில் 2019 களில் இயேசுவின் உயிர்ப்பை மக்கள் கொண்டாடிய வேளையில் பயங்கர தீய மத அமைப்புகள் தற்கொலை படையாக பல ஆயிரக்கணக்கானோரை கொன்றது இதற்கு சாட்சி.
பல ஆபிரிக்க நாடுகளில் தொடர்ந்தும் பலவித தீய மத அமைப்புகள் இயேசு கிறிஸ்துவின் செய்தியை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது, குண்டு தாக்குதல் மேற்கொள்கின்றன.
இத்தீய சக்திகளால் நிலைத்து நிற்க முடியாதளவுக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை நிலையாக நிற்கின்றது.
ஜீவாதிபதியான இயேசுவின் நற்செய்தி உலகின் பல பகுதிகளுக்கும் கடந்து செல்வதற்கு இயேசு கிறிஸ்து தற்போதும் ஜீவிப்பவராகவே இருப்பதுவே காரணமாக உள்ளது.
இயேசு கிறிஸ்து மீண்டும் உலகிற்கு வரும் நாளில் இராஜாவாக வெளிப்படுவார். இஸ்ரவேலின் எருசலேமில் அவருடைய வருகை காணப்படும்.