குண்டுத் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளால் சாபம் அடையும் மனித குலமும் உயிர்த்த ஞாயிறும்

பல்வேறு தாக்குதல்களை மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளும் மனிதனின் வாழ்வு சாபத்தால் நிறைந்துள்ளது.

உலகத்தில் பாவத்தால் மனிதனை மனிதன் அழிக்கும் நிலைக்கு சென்று சாபத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

முட்டாள்தனமான சிந்தனைக்குள் அகப்பட்ட பகுத்தறிவற்ற சமுதாயமாக சாபத்தை உருவாக்கிக் கொண்ட மனித இனம் கேடு கெட்டது.

பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதம் உருவாக்கப்படுகின்றது.

இயேசுவின் வழியானது சமாதான தேசத்தை கண்டடைவதாக உள்ளது.

இறுதி காலத்தில் கிறிஸ்தவத்திற்கு எதிரான பல சதித்திட்டங்கள் , யூதர்களுக்கு எதிரான பொய் பிரச்சாரங்கள் பரவலாக உருவாக்கப்பட்டு அதி விரைவாக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

தீவிரவாத செயற்பாடுகளுக்காக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மதவாதங்கள் இனவாதங்களை தூண்டி விடுவதும் நெருப்பு மூட்டி குளிர்காய்வதும் பலரது தொழிலாகி விட்டது.

சொந்த நாட்டை விட்டு செல்வந்த நாடு செல்வதும், பல இடங்களில் நிலம் வாங்கி குவிப்பதும் ஆசைக்கும் பேராசைக்குமான கூடாரமாக மனித மனம் தீவிரிக்கின்றது.

பிறரது சொத்தை திருடி பயங்கரவாதத்தை வளர்த்து கேடு செய்யும் மனப்பாங்கு சாபத்தின் உச்ச கட்டம்.

பாவத்தை வென்றவர் இயேசு கிறிஸ்து. அதோடு சாபத்தை, துன்பத்தை, மரணத்தை, பாவ அதிகாரத்தை, சாத்தானை, மதவாதத்தை, இனவாதத்தை வென்றார்.

உயிரோடு வரப்போகும் இராஜாதி இராஜா இயேசு கிறிஸ்துவை காணும் போது சாபத்தை விதைத்தவர்கள் தடுமாறி தோற்றுப் போவர் என்பதே உண்மை.

குண்டுத் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளால் சாபம் அடையும் மனித குலமும் உயிர்த்த ஞாயிறும்