வேதாகம கேள்வி பதில்

கிறிஸ்தவர்களின் இறைவனான இயேசு கிறிஸ்து, இஸ்ரவேலரான யூதர்களின் தேவனால் கட்டளையிடப்பட்ட கட்டளைகளை மதித்து நடந்தாரா ? ஏன் அவரை இஸ்ரவேலரான யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ? 

இயேசு கிறிஸ்து உலகிற்கு வர முன்னரே யூதர்களுக்கு தேவனால் கட்டளைகள் கொடுக்கப்பட்டிருந்தன என்பது உண்மையான விடயமாகும். இயேசு யூத ஜாதியில் வந்ததின் காரணத்தினால் அவர் ஏக தேவனின் கட்டளைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகவே இருந்தது. அந்த கட்டளைகளை இயேசு ஒருபோதும் மரணம் வரை கூட விட்டுவிடவில்லை. பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட அத்தனை கட்டளைகளையும்  வாழ்வின் இறுதிவரை செய்து நிறைவேற்றினார் என்றே புதிய ஏற்பாடு கூறுகின்றது. ச

யூதர்களை பொறுத்தவரை பழைய ஏற்பாட்டில் வருகின்ற சட்டதிட்டங்கள் அவர்களது பாட்டன் பூட்டனின் சேர்க்கப்பட்ட பாரம்பரிய அந்நிய பழக்கவழக்கங்கள் கொண்டு வாய்வழி மாற்றங்கள் நிறைய காணப்பட்டன. தேவனின் கட்டளைகளுக்கு நேரடியான அர்த்தம் கற்பிப்பதை விட தாங்கள் உணரும் வண்ணம் செய்யலாம் என்ற மனித ஆசைகளுக்குள் சிக்குண்டிருந்தார்கள். சரீரத்தில் செய்தால் பாவம் என தேவன் கூறியவற்றை மனதால் அனுபவிக்கலாம் எனும் மோசமான பாவ வழிக்குள் சிக்கியிருந்தனர். இயேசு இவைகளை கண்டித்ததால் அவர்கள் இயேசுவை வெறுத்து ஒதுக்கித் தள்ளினார்கள்.

உதாரணமாக விபச்சாரம் செய்யாதே என்ற தேவனின் கட்டளையை எடுத்துக்கொண்டால் அது சரீரத்தால் செய்தால் பாவம் என்பதால்  அதை மனக் கற்பனையாக செய்தனர். ஆகவே இயேசு மனதால் கூட ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கக் கூடாது என்பதற்காக கண்களின் பார்வையின் இச்சை மூலம் பாவம் வருவதாக கூறி அப்படி செய்ய விடாது தடுத்தார். யூதர்கள் கட்டளையை இலகுவாக்கி வேறு விதமாக செய்ய முயன்றனர். இயேசு அதின் ஆபத்தை எடுத்துரைத்தார்.  ஆகவே இயேசு கட்டளையின் பாரத்தை அதிகமாக்கினதினால் யூதர்கள் அவரை வெறுத்தனர். அவரது கண்டிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக