இஸ்ரேலின் வரலாறு உலகின் ஆரம்பத்தோடு ஆரம்பமானது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ஆரம்ப யூத மூதாதையர் ஈசாக்கின் மூலமாக ஆபிரகாமின் சந்ததி விருத்தி அடைகிறது. அப்போதே இறைவன் ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் ஒரு தேசத்தை வாக்களித்து விடுகிறார். அந்த தேசம் அவர்களுக்கு சொந்தமானது என்பதை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அடிக்கடி நினைப்பூட்டி வரலாற்றிலேயே மாபெரும் காரியங்களை இறைவன் செய்து வந்ததை காணக்கூடியதாக இருக்கிறது.
இறைவனுக்கு விருப்பமானவர்களாக இஸ்ரவேலர்கள் இருக்கிற பொழுது அவர்கள் தேசத்தை அடைவதும், இறைவனுக்கு விருப்பமற்ற காரியங்களை செய்கிறபொழுது இஸ்ரவேலர்கள் தேசத்தை விட்டு துரத்தப்படுவதும் மாறி மாறி நடைபெற்று வருகிற ஒன்றாக காணப்பட்டது.