வேதாகம கேள்வி பதில்

விஞ்ஞானம் கூறும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையான கூர்ப்பு கொள்கைக்கு மாறாக கிறிஸ்தவர்களின் வேதத்தில் மனிதன் இறைவனால் உருவாக்கப்பட்டான் என்று கூறுவது சரியா  ?

விஞ்ஞானம் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றதே தவிர கிறிஸ்தவம் எப்போதோ வளர்ந்து விட்ட மாமரம். கிறிஸ்தவம் பல நுாற்றாண்டுகளுக்கு முன்னமேயே மனிதன் உருவான விதத்தை கூறி விட்டது என்பது உண்மைதான். விஞ்ஞானம் உருவானதே கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்.,  1850 களில் தான் .

150 வருட விஞ்ஞானம் 5000 வருடத்திற்கும் மேலான பழமையான கிறிஸ்தவத்தின் கொள்கையை மாற்றி விட முடியுமா ?  ஆக விஞ்ஞானத்தின் கொள்கையானது மனிதனின் அறியாமைக்கு எடுத்துக்காட்டு.

பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாக மனிதனையும் மிருகங்களையும் தேவன் மண்ணினாலே உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. நாயை போன்று பூனை, பூனை போன்று யானை,  ஒவ்வொன்றுக்கும் சின்ன சின்ன வித்தியாசங்கள் கொண்டு இறைவன் படைத்திருக்க நாயிலிருந்து பூனையும் அதிலிருந்து யானையும் வந்தது என கூற முடியுமா ? மனிதன் போன்று குரங்கும் நடக்கும் வண்ணம் இறைவன் மண்ணினால் படைத்ததை விட பரிணாமக் கொள்கை தான் முக்கியமாய் தெரிகிறது அஞ்ஞானிகளுக்கு. 

கடைசியாக தேவன் மனிதனிடம் கூறியது - பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், பூமிக்குத் திரும்புமட்டும் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய், 

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக