வேதாகம கேள்வி பதில்

கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிள் எனப்படும் பரிசுத்த வேதாகமத்தில் ஏன் இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன ? அவை ஏன் ஒரே காலத்தில் எழுதப்படவில்லை ? 

ஆம் கிறிஸ்தவர்களின் வேதத்தில் இரு பெரும் பிரிவுகள் உள்ளது. ஒன்று பழைய ஏற்பாடு, மற்றையது புதிய ஏற்பாடு.  இரண்டும் எழுதப்பட்ட காலங்களும் பல ஆயிரம் வருட இடைவெளி கொண்டமைந்துள்ளது,   

ஏன் வேதத்தில் இரு பிரிவுகள் உள்ளது என ஆராயும்போது அது சிறு பிள்ளைகள் கூட விளங்கிக் கொள்ளத்தக்கதாக உள்ளது,  இரண்டு கால யுகங்கள் அங்கு இரண்டு பிரிவாய் உள்ளது, பழைய ஏற்பாடு கிறிஸ்து வர முன் நடைபெற்றவற்றையும், புதிய ஏற்பாடு கிறிஸ்து பிறப்பதிலிருந்ததான வரலாற்றையும் எடுத்தியம்பி நிற்கின்றது. முற்காலத்தில் நடைபெற்றவை பழைய ஏற்பாட்டிலும் பிற்காலத்தில் நடைபெற்றவை புதிய ஏற்பாட்டிலுமுள்ளது. இது இரு பெரும் பிரிவுகள் என சொல்ல முடியாதபடி காலத்தால் இணைக்கப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். காலத்தின் இடைவெளியினாலேயே இரு பெரும் பிரிவுகளாக தோற்றம் பெற்றுள்ளது.

இரண்டு கால யுகங்களின் வரலாற்றை ஒரே நேரத்தில் எழுதி விட முடியாதல்லவா ? இது வானத்தில் இருந்து குதித்த புத்தகம் அல்ல. நாற்பது மனிதர்கள் இறைவனது சித்தத்தை வேறுவேறுபட்ட காலங்களில் அறிந்து எழுதியுள்ளனர். ஆகவே இது ஒரே நாளில் மனித கரங்களில் கிடைத்து விடவில்லை. பகுதி பகுதிகளாகவே மனிதருக்கு கிடைத்த பல புத்தகங்களின் தொகுப்பே பரிசுத்த வேதாகமம் எனப்படும் பைபிளாகும். நாற்பது மனிதர்களது எழுத்தாக்கமும் ஒரே இறைவனது விருப்பத்தை சொல்லி நிற்கின்றது என்பதே புதுமை.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக