மணிப்பூர் செய்திகள்

01 Aug 2023 

மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 9-வது நாளாக முடங்கின.

மணிப்பூர் கலவரம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் நாளை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு.

மணிப்பூர் விவகாரம் குறித்து ஒரு சிறு விளக்கம் அளிக்கக் கூட பிரதமர் தயாராக இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.  

இன்றைய விசாரணையின்போது 6,000க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 ”வன்முறை தொடர்பாக 6,000-க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 50 மட்டும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்படி என்றால் மற்றவற்றின் நிலைமை என்ன ? மணிப்பூர் மாநில காவல் துறையினர் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எப்படி நம்புவது? மணிப்பூர் காவல்துறையினர் தங்களது பொறுப்புகளை செய்யாமல் இருந்துள்ளனர்.  அதை செய்ய அவர்களுக்கு தகுதி இல்லையா? அல்லது ஆர்வம் இல்லையா?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.  

குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் இடையே நிலவி வரும் கடும் மோதலே மணிப்பூர் பற்றி எரியக் காரணம் / மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். / மைத்தேயி மக்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்களுக்கான உரிமை பாதிக்கப்படும் என்று குக்கி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். / 150 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த இனக் கலவரத்தால் 40,000க்கும் மேற்பட்ட தங்கள் வாழ்விடங்களை விட்டும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

2023 மே மாத தொடக்கத்தில் ஆரம்பித்த கலவரத்தில் காவல்துறையின் ஆயுத குடோன்கள் சூறையாடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தேவாலயங்கள், ஒரு டஜனுக்கும் அதிகமான கோவில்கள் அழிக்கப்பட்டன. கிராமங்கள் தீக்கிறையாக்கப்பட்டன.